சென்னைக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது
மூவர் தேவாரம் பெற்ற சிவத்தலம். சிவபெருமான் புற்று வடிவில் காட்சி தருகின்றார். அதனால் அவருக்கு புனுகு சாத்தி கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் இருந்து மூன்று நாட்கள் இறைவனை கவசம் இல்லாமல் தரிசனம் செய்ய முடியும். சுந்தரருக்கும் சங்கிலி நாச்சியாருக்கும் நடந்த திருமணத்திற்கு சிவபெருமான் மகிழ மரத்தடியில் வந்து சாட்சி சொன்ன தலம். உறுதிமொழியை மீறியதால் சுந்தரர் கண்பார்வை இழந்தார். முருகப்பெருமான் பாலசுப்ரமணியராக தனி சன்னதியில் காட்சி தருகிறார். பட்டினத்தார் முக்தி பெற்ற தலம். மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் சிறப்பு வாய்ந்தது. |